Posts

சிறுபாணாற்றுப்படை - அறிமுகம்

த மிழ் மொழியின் தொன்மை இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல் [1] . அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.   இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன. அந்தச் செய்யுள்கள் அனைத்தும் யாப்பிலக்கணத்துக்கேற்ப இயற்றப்பட்ட தனிப்பாடல்கள்.   தொல்காப்பியம் பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்த...

சிறுபாணாற்றுப்படை மூலமும் எளிய உரையும்

  சிறுபாணாற்றுப்படை மூலமும் எளிய உரையும்   நிலமகளின் தோற்றம்   மணிமலை பணத்தோள் மாநில மடந்தை அணிமுலை துயல்வரூஉம் ஆரம் போலச் செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்றுக் கொல்கரை நறும்பொழில் குயில்குடைந்து உதிர்த்த புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்                           5                 கதுப்பு விரித்தன்ன காழக நுணங்குஅறல்   அருஞ்சொற்பொருள்: 1.மணிமலை = மணிகளையுடைய மலை; பணை = மூங்கில்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; மா = பெரிய; மடந்தை = பெண்(நிலமகள்) 2. அணி = அழகிய; துயல்தல் = அசைதல்; துயல்வரூஉம் = அசைகின்ற; ஆரம் = மாலை 3. புனல் = நீர்; உழந்த = வருந்த; சேய் = தொலைவு; கான் =காடு 4. கொல்கரை =அழிகின்ற கரை (ஆற்று நீரால் இடிக்கப்படும் கரை); நறும் பொழில் = நறுமணமுள்ள சோலை 5. செம்மல் = சாதிப்பூ; புடை = பக்கம்; நெறித்து = சுருண்டு 6. கதுப்பு = கூ...