Posts

Showing posts with the label சிறுபாணாற்றுப்படை - பொருட்சுருக்கம்

சிறுபாணாற்றுப்படை - பொருட்சுருக்கம்

  சிறுபாணாற்றுப்படை - பொருட்சுருக்கம்   நிலமகளின் தோற்றம் பெரிய நிலமாகிய பெண் , மணிகளையுடைய மலைகளாகிய அழகிய முலைகளும் , மூங்கிலாகிய தோள்களுமுடையவள் . அவளுடைய அழகிய முலைகளில் கிடந்து அசைகின்ற மாலையைப் போல் , ஓடிவருகின்ற நீரானது , தொலைவிலிருந்து வருகின்ற காட்டாற்றோடு கலக்கும் . அந்தக் காட்டாற்றின்    கரையில் நறுமணமுள்ள சோலைகள் உள்ளன . அந்தச் சோலைகளில் உள்ள குயில்கள் ( தம் அலகுகளால் ) குடைந்து உதிர்த்த புதிய சாதிப்பூக்களைச் சூடிய , பக்கங்கள் சுருண்ட நிலமகளின் கூந்தல் விரிந்து கிடப்பதைப்போல் ஆற்றின் கரையில் உள்ள நுண்ணிய கருமணல் இருக்கும் .   இளைப்பாறும் பாணன் அந்தக் கருமணலில் உள்ள சூடான பரற்கற்கள் தங்கள் கால்களைக் கிழித்து வருத்துவதால் , பரிசளிக்கும் வள்லல்களைத் தேடிவந்த ஒரு பாணனும் அவன் சுற்றத்தாரும் மெல்ல நடந்து செல்கின்றார்கள் . இளவேனிற்காலத்திற்கு அடுத்துவரும் முதுவேனிற்காலத்தில் , காலைக் கதிரவனின் கதிர்கள் வெப்பத்தை மிகுதியாகச் செலுத்துவதால் பாலை நிலத்தில் நீண்ட வழியையுடைய காட்டுப் பாதையில் உள்ள கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி அவர்கள் இள...